அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?

ஃப்ரைன்

ஃப்ரைன் ஒரு அழகான இளம் கிரேக்க பெண். அழகு மட்டுமல்ல அறிவானவள். ஆனால் அவளின் தோற்றத்திற்காக அவள் நீதிமன்றத்தில் ஆடை களைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்ரோடைட் என்று அழைக்கப்படும் அந்த கிரேக்க பெண் கடவுளின் சிலை, பிராக்ஸிடெலஸால் ஆடையில்லாமல் வடிவமைக்கப்பட்டது. பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்த அழகிய சிலை.

அப்ரோடைட் ஒரு ஹெடைரா. அப்படியென்றால் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர் என்று பொருள் ஆனால் ஃப்ரைன் ஒரே ஒரு ஆணுடன் மட்டும்தான் தொடர்பு வைத்திருந்தார். மேலும் ப்ரெய்ன் அழகான, அறிவான, நன்கு கற்றறிந்தவள்.

ஏதேன்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலிஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் ப்ரெய்ன் மீது மிக மோசமான மற்றும் வலுவான ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது; அவர் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுதான் அது.

ஹெடைரா, பழங்கால கிரெக்க வரலாற்றில், `தொழில்முறை பாலியல் தொழில் செய்பவர்கள்` என்று அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அழகில் மட்டுமல்ல அறிவிலும் சிறந்து விளங்கினார்கள்.

அழகின் வடிவம்

ஃப்ரைன் ஒரு ஹெடைரா, கிரீஸில் பொயோடியா என்ற இடத்தில் பிறந்த ஃப்ரைன் வாழ்வை தேடி ஏதேன்ஸிற்கு சென்றார். பிராக்ஸிடெலெஸால் உருவாக்கப்பட்ட அவரின் சிற்பம் தற்போது பல இடங்களில் காணப்படுகிறது; அந்த சிலையில் நேரான மூக்குகளுடன், வட்ட வடிவ தாடையுடன், அழகிய உதட்டுடன், வசீகரமான அகல கண்களுடன் காணப்படுவார் ஃப்ரைன். இந்த பெண் கடவுளுக்கு தேரை என்ற ஒரு பட்டப்பெயரும் உண்டு. அது அவரின் அழகிய மஞ்சள் நிறத் தோலால் அவருக்கு வந்த பெயர்.

ஃப்ரைன் தனது சுதந்திர போக்கிற்காக அறியப்பட்டார். மேலும் அவரின் அறிவு மற்றும் ஆர்வத்தால், அவர் நான்காம் நூற்றாண்டு (கிறித்து பிறப்பிற்கு முன்) காலத்தில் வாழ்ந்த தத்துவாதிகளுடன் பேசப்படுகிறார். இவர்கள் இன்றைய காலம் தொட்டு பெரிதும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த அறிவாளிகள்.

ஆனால் சமீப காலங்களில் ஃப்ரைன் குறித்து எழுதப்படுபவை அனைத்தும் அவரின் அறிவாற்றலை தவிர்த்துவிட்டு அவரின் அழகின் மீது மட்டும் கவனம் செலுத்தப்பட்டு எழுதப்படுவதாக உள்ளது.

அப்ரோடைட் சிலை

கிரேக்க தீவான கோஸில் பிராக்ஸிடெலெஸிடம் கிரேக்க கடவுளான அப்ரோடைட்டின் சிலையை வடிக்க சொல்கின்றனர். அப்ரோடைட் அழகு, மகிழ்ச்சி, கருவுறுதலின் கடவுளாக பார்க்கப்பட்டாள் என்கிறார் ரோமானிய என்சைக்ளோபிடியா நிபுணர் ப்லினி.

பிராக்ஸிடெலெஸ் ஒன்றல்ல இரண்டு சிலையை வடித்தார். ஒன்று ஆடையுடன் மற்றொன்றை ஆடையில்லாமல் வடிவமைத்தார்.

கோஸ் தீவின் மக்களுக்கு இரண்டாம் சிலையை வைத்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை எனவே அவர்கள் முதலாம் சிலையை வைத்துக் கொண்டனர் ஆனால் கிரேக்கத்தின் சிண்டோ நகர மக்கள் அந்த பெண் கடவுளின் ஆடையில்லா சிலையை வைத்துக் கொண்டனர்.

ரோமானிய வரலாற்று நிபுணர்கள், அரசர் நிகோமெடிஸுக்கு பிராக்ஸிடெலெஸ் வடித்த நிர்வாண சிலை பிடித்துவிட்டது என்றும், அதற்கு பதிலாக சிண்டோ நகரை கொடுத்து, அவரின் கடன்களை மன்னித்து விட்டார் என்றும் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இது சிண்டோ மக்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த சிலைதான் சிண்டோவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.

ஃப்ரைன் குறித்து நாம் பல தரப்பிலிருந்து பல கதைகளை கேட்கலாம். அந்த கதை அனைத்தும் அவர் அழகான, தெளிவான, அழுத்தமான பெண் என்பதை கூறுகிறது.

ஏதேன்ஸ் நகர பெண்கள் குறிப்பாக பணக்கார பெண்கள், ஆண் துணையின்றி வெளியே செல்ல மாட்டார்கள், ஆனால் ஃப்ரைன் அனைத்து சுதந்திரமும் பெற்றவராக இருந்தார், குறிப்பாக ஹெடைரா மக்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அதேபோல நன்கு படித்தவர்களாகவும், தனது ஆண் துணையினரிடம் தத்துவ ரீதியாகவும் கலை ரீதியாகவும் உரையாடக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

தி வால்ஸ் ஆஃப் தெப்ஸ்

ஃப்ரைன் அழகில் மட்டும் சிறந்த பெண் அல்ல. வார்த்தை ஜாலத்திற்கும், சமயோஜித புத்திக்கும் பெயர்போனவர். என்கிறார்கள்; அதுமட்டுமல்லாமல் அந்த காலத்தில் அவரின் வெற்றியை அவரே தேர்ந்தெடுத்த பணக்கார பெண்ணாகவும் அவர் இருந்தார்.

336 (கிறித்து பிறப்பிற்கு முன்) அலெக்சாண்டரால் அழிக்கப்பட்ட ’வால்ஸ் ஆஃப் தேப்ஸை’ மீண்டும் கட்டுவதற்கான பணத்தை அளித்தார் ஃப்ரைன்.

ஆனால் அதற்கு, அலெக்டாண்டரால் இடிக்கப்பட்ட, ஃப்ரைனால் கட்டமைக்கப்பட்ட சுவர் என பெயர் சூட்ட வேண்டும் என்று அவர் கோரினார்.

ஆனால் `அலெக்சாண்டர் தி கிரேட்டால்` அழிக்கப்பட்ட ஒரு சுவரை பெண் ஒருவர் கட்டமைப்பதை ஏற்றுக் கொள்ளாத அந்த ஊரின் ஆண் சமூகம் அந்த யோசனையை தகர்த்தது.

நிதிமன்றத்தில் வழக்கு?

ஆனால் நான்காம் அல்லது ஐந்தாம் (கிறித்து பிறப்பிற்கு முன்) காலத்தில் வசப்பெயர்கள் பெற்ற பலரை போலவே ஃப்ரைன் ஒரு தவறான வழக்கில் மாட்டிக் கொண்டார். நமது செய்தி ஆதாரங்கள் அது ஒரு முக்கிய குற்றச்சாட்டு என்கின்றனர்.

தெய்வ சிலை ஒன்று வடிவமைப்பதற்காக அவர் மாடலாக நின்றதற்காக அவர் மீது இந்த குற்றம் சுமத்தப்பட்டிருக்கலாம்.

கிரேக்க பேச்சாளரான அதேனேயஸ், ஃப்ரைனுக்கு ஆதரவாக வழக்காடிய வழக்குரைஞர் தனது பணியை சரியாக செய்யவில்லை என்கிறார்.

கிரேக்க வரலாற்றில் மிகச்சிறந்த பத்து பேச்சாளர்களில் ஒருவராக கருதப்பட்ட ஹிபெரிடெஸ்தான் அந்த வழக்குரைஞர்; அவரால் கூட நீதிபதியை ஒப்புக் கொள்ள வைக்க முடியவில்லை.

நெருக்கடியான அந்த சமயத்தில் ஃப்ரைனுக்கு எதிராக நீதிபதி தீர்ப்பளிக்க போகும் சமயத்தில் வழக்குரைஞர் ஃப்ரைனின் ஆடையை களைந்து அவரின் மார்பை நீதிமன்றத்தில் காட்டினார். இந்த செயல் ஃப்ரைனின் அழகை நீதிமன்றத்தில் காட்டி, அவர் அப்ரோடைட் கடவுளாக சிலை அமைக்க மாடாலாக நிற்க தகுதியானவர் என்பதை நிரூபிப்பதற்கு முயற்சித்தார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஃப்ரைனை கண்ட ஆண் நீதிபதி உடனடியாக அவரை விடுவித்துவிட்டார்.

இந்த காட்சியின் உண்மைத்தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் இதை பல ஆண் கலைஞர்கள் உத்வேகமாக எடுத்துக் கொண்டு பல படைப்புகளை உருவாக்கியதில் ஐயம் ஒன்றும் இல்லை.

உண்மை என்னவென்றால் ஃப்ரைனின் வழக்கு அந்த சமயத்தில் இல்லாத சில எழுத்தாளர்களின் வார்த்தையை கொண்டுதான் கற்பிக்கப்படுகிறது.

இந்த கதைக்கு மற்றொரு வடிவமும் உண்டு அதாவது, ஃப்ரைன் நீதிமன்றத்தின் முன் பேசி தனது வாதத்தை முன் வைத்து குற்றமற்றவர் என்று நிரூபித்தார் என்பதுதான் அதன் இன்னொரு வடிவம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: